நிமல் சிறிபாலவின் லஞ்ச- ஊழலைக் கண்டுபிடிக்க மூவரடங்கிய குழு
முன்னாள் துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் திரு.நிமல் சிறிபால டி சில்வா ஜப்பானின் தாய்ஸ் நிறுவனத்திடம் கமிஷன் கோரியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சம்பவம் பற்றி.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூவரடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.
ஓய்வுபெற்ற நீதிபதியும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான திருமதி குசலா சரோஜனி வீரவர்தன தலைமையிலான இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவை விசேட அதிகாரி எஸ்.எம்.ஜி.கே.பெரேரா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் குழுவின் அறிக்கையை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.