இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு
ரயில் கட்டண திருத்தம் இன்று (23) முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இன்று முதல் ரயில் கட்டணத்தை திருத்த முடியாது என நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய ரயில் கட்டண திருத்தத்தின்படி 10 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச ரயில் கட்டணம் 20 ரூபாயாக உயரும்.
இரண்டாம் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாயாகவும், முதல் வகுப்புக்கான குறைந்தபட்ச கட்டணம் 100 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதல் 10 கிலோமீட்டரில் மூன்றாம் வகுப்புக்கு 2.60 ரூபாய் , இரண்டாம் வகுப்புக்கு 5.20 ரூபாய், முதல் வகுப்புக்கு 10.40 ரூபாய் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் லீற்றர் ஒன்றின் விலை 400 ரூபாவாக இருந்த போது, புகையிரத கட்டணமும் பஸ் கட்டணத்தில் பாதியாக மாற்றியமைக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.