பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட தீர்மானம்!
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட அறிவிப்பொன்று விடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
திட்டமிட்ட வகையில் நாளை மறுதினம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இயன்ற வரையில் எரிபொருள் பெற்றுக்கொடுக்கப்பட்டு பாடசாலைகளில் கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும்.
மேலும் மாணவர்களின் நன்மை கருதி ஓகஸ்ட் மாதத்திற்கான விடுமுறை வழங்கப்பட மாட்டாது எனவும், அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.