நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம்?

Reha
2 years ago
நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம்?

நாட்டில் மேலும் 12 அமைச்சர்கள் நியமனம் பெறவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் 18 அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் பெற்றனர்.

இதற்கமைய அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு வாரங்களில் இவ்வாறு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதுள்ள இடைக்கால அமைச்சரவையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றுக்கு செல்வார் என எதிர்பார்ப்பதாகவும்  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!