6 மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்

#Protest
Prasu
2 years ago
6 மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை சிறையில் உள்ள 6 மீனவர்களையும், விசைப் படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ம் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஒரு விசைப்படகையும், அதில் இருந்த அந்தோணி, அஜித் உள்ளிட்ட 6 மீனவர்களையும் கைது செய்து இலங்கை வவுனியா சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் நடந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இலங்கை கடற்படை கைது செய்த 6 மீனவர்களையும், விசைப்படகையும் விடுவிக்கக் கோரி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது, இன்று (ஜூலை 24) ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி ராமேசுவரம் துறைமுகத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லாமல் நேற்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. 

இதனால் ஒரு நாளைக்கு ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!