நீர்த்தேக்கங்களுக்கு அருகில் குளிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை!
Prabha Praneetha
2 years ago
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளமையால் பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் ஆபத்தான நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீர்த்தேக்கங்களுக்கு அருகில் மக்கள் குளிப்பதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ராவணா நீர்வீழ்ச்சி, தியலும நீர்வீழ்ச்சி, துன்ஹிந்த நீர்வீழ்ச்சி, மொனராகலை மாவட்டத்தில் எல்லேவல நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும் பொலிஸாரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.