விவசாயத் துறைகளில், பரிந்துரைக்கப்படும் கிளைபோசேட்டின் பயன்பாடு, இந்த வாரம் மீண்டும் அங்கீகரிக்க முடிவு

Kanimoli
2 years ago
விவசாயத் துறைகளில், பரிந்துரைக்கப்படும் கிளைபோசேட்டின் பயன்பாடு, இந்த வாரம் மீண்டும் அங்கீகரிக்க முடிவு

விவசாயத் துறைகளில், பரிந்துரைக்கப்படும் கிளைபோசேட்டின் பயன்பாடு, இந்த வாரம் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேயிலை மற்றும் ரப்பர் தோட்டங்களுக்கு களைக்கொல்லியின் மூன்று ஆண்டு தடை முடிவுக்கு வந்துள்ளது.

பூச்சிக்கொல்லிப் பதிவாளரால் கடந்த 17ஆம் திகதி இந்த மாற்றம் குறித்த அரசிதழ்(வர்த்தமானி) வெளியிடப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம், உரிமக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கிளைபோசேட் மீதான இறக்குமதித் தடையை, நிதி அமைச்சகம் நீக்கியதை அடுத்தே, இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

இதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு, அக்டோபர் முதல் இருந்ததைப் போல, தேயிலை மற்றும் ரப்பருக்கு மாத்திரம் கட்டுப்படுத்தாமல், களைக்கொல்லியை, விவசாயத் துறைகள் முழுவதும் பயன்படுத்த இந்த வாரம், மேற்கொள்ளப்பட்ட திருத்தம் அனுமதிக்கும்.

கிளைபோசேட் முதன்முதலில் 2015 இல் ஒரு மாற்றீட்டை அறிமுகப்படுத்தாமல், தடை செய்யப்பட்டது. ஆனால் தேயிலை மற்றும் ரப்பருக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தடை விலக்கப்பட்டது.

இதற்கு காரணமாக, கிளைபோசேட் பயன்படுத்தப்படுவதால் இலங்கையின் தேயிலைக்கு, ஜப்பானில் தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அப்போதைய அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!