மாணவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
Kanimoli
2 years ago
கல்வி பொதுத்தர தாரதர சாதாரண தர பரீட்சையின் பின்னர் மாணவர்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக தொழில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஏற்கனவே அரசாங்கத்தின் தொழில்பயிற்சி நிறுவனத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று வரும் மாணவர்கள் அடுத்த வருடமளவில் பயிற்சியை முடித்து வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் இந்த விடயங்கைள குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.