முல்லைத்தீவு ஏரல் எடுக்க சென்ற இளைஞனை கடல் இழுத்துச் சென்ற பரிதாபம்
Prathees
2 years ago
முல்லைத்தீவு சாலை கடல் நீர் ஏரியில் இன்று (20) காலை ஏரல் எடுக்க சென்ற இளைஞன் கடல் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
05 ஆம் வட்டாரம் இரணைப்பாலை புதுக்குடியிருப்பினை சேர்ந்த 26 வயதுடைய செ.நிசாந்தன் என்ற இளைஞனே கடலில் இழுத்து செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இவரை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் கடல் சீற்றம் காரணமாக இளைஞனின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை.