எம்பிலிப்பிட்டியவில் 1000 ஏக்கரில் கஞ்சா பயிரிட ஏற்பாடு: ஓமல்பே சோபித தேரர்
Prathees
2 years ago
எம்பிலிப்பிட்டியவில் 1000 ஏக்கரில் கஞ்சா பயிரிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய போதிராஜாராம விகாரையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அந்த முயற்சியை மகா சங்கத்தினரும் உள்ளூர் பௌத்த பக்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
கஞ்சா பயிரிடுவதை சட்டப்பூர்வமாக்கினால் அது அரசு எதிர்பார்க்கும் பொருளாதார வளர்ச்சியாக இருக்காது என்றும், அது கண்டிப்பாக தார்மீக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றார்.
எம்பிலிப்பிட்டியை மீண்டும் கஞ்சா நகரமாக மாற்றும் முயற்சியை தடுப்பதற்கு நிச்சயமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.