ஜப்பானிய தூதுவர் ஹிடேகியை உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்த அமைச்சர் நசீர் அஹமட்
Kanimoli
2 years ago
அமைச்சர் நசீர் அஹமட் ஜப்பானிய தூதுவர் ஹிடேகியை கடந்த வெள்ளிக்கிழமை அவரது மைட்லேண்ட் கிரசேன்ட் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஜப்பானின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலகில் பல்லுயிர் மற்றும் காலநிலை மாற்றத்தைப் பாதுகாப்பதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கள் பற்றி சுற்றாடல் அமைச்சர் இச்சந்திப்பின் போது விரிவாக விளக்கியுள்ளார்.
இச்சந்திப்பில் அமைச்சருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துக்கோறள மற்றும் எஸ்.எம் .எம்.முஸ்ஸரப் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.