பெண்களை வேலைக்காக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
Prathees
2 years ago

வேலை வாய்ப்பு நிறுவனங்களினால் அழைத்து வரப்பட்ட பெண்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் சொத்துக்களையும் கொள்ளையடித்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பண்டாரகம, விடகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த பெண் ஒருவர் அந்த வீட்டை விட்டு ஓடியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுருலு, நிககேவ கும்புக்வேவ, பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் தான் பண்டாரகமவில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக வேலைக்கு அழைத்து வந்ததாகவும், தனது முதலாளியால் இரண்டு இரவுகள் அங்கு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காலி படாதுவ பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.



