வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ள அரசாங்கம் நடவடிக்கை
Prabha Praneetha
2 years ago

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையை சொந்தநாடாக கொண்ட வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இதன்படி அவர்களின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இலங்கையில் விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.



