பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Prabha Praneetha
2 years ago

இலங்கையில் பொது மக்களுக்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி வீதிகளில் அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளன.
அந்த வகையில் வாகனப் பதிவு எண், நேரம், இடம் போன்றவற்றைக் குறிப்பிட்டு புகைப்படம் எடுத்து அனுப்பி வைக்குமாறு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவிக்க மக்களுக்கு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, WhatsApp அல்லது Viber எண் 0703500525, மின்னஞ்சல் முகவரி dmtvet@gmail.com, தொலைபேசி இலக்கம் 0113100152, தொலைபேசி/தொலைநகல் 0112669915, இணையத்தள முகவரி http://vet.lk/contact.html என அறிவிக்கப்பட்டுள்ளது.



