சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு நோய் நிலைமை குறித்து எச்சரிக்கை

Kanimoli
1 year ago
சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு  நோய் நிலைமை குறித்து எச்சரிக்கை

சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு  நோய் நிலைமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கடும் காற்று மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக குழந்தைகள் இலகுவாக நோய்கள் தாக்குவதாகவும் இதன் விளைவாக கடும் குளிரில் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். 

காற்று மற்றும் குளிருடான காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு பல நோய்கள் ஏற்படக்கூடும். மேலும் கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு காய்ச்சல் குறிப்பாக குளிர்ச்சியுடன் அதிகரிக்கும் எனவும் வைத்தியர் கூறினார். பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்வதிலும் பெற்றோர்கள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் கேட்டுக்கொண்டார்.  

மேலும் காற்று மாசடைவு காரணமாக வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லவேண்டும். காற்று மாசடைவு எடை குறைந்த குழந்தைகளுக்கு உகந்ததல்ல. அவர்களின் உடல் வெப்பநிலை குறைந்து அவர்கள் இலகுவில் நோய்வாய்ப்படலாம் என வைத்தியர் தீபால்  பெரேரா தொடர்ந்தும் வலியுறுத்தினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!