இலங்கையின் திருக்கேதீஸ்வர மறுமலர்ச்சியில்; இந்தியாவின் பங்கு! வெளியுறவு அமைச்சர் பெருமிதம்

Kanimoli
1 year ago
இலங்கையின் திருக்கேதீஸ்வர மறுமலர்ச்சியில்; இந்தியாவின் பங்கு! வெளியுறவு அமைச்சர் பெருமிதம்

இலங்கையின் மன்னாரில் ஒரு கோவிலை மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நேற்று நினைவு கூர்ந்தார்
12 வருடங்களாக மூடப்பட்டிருந்த மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை இந்தியா மீட்டெடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் கூட மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலை நாங்கள் மீட்டோம். இந்த கோவில் 12 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது.
எனவே நாங்கள் ஆர்வம் காட்டி, முயற்சி செய்ததால், அந்த கோவிலின் மறுமலர்ச்சி சாத்தியமாகியுள்ளது என்று அவர் கூறினார்.
இந்திய வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற சமூகத்திலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் கோயில்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து புனித ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் கோயில், துணைக்கண்டம் முழுவதும் உள்ள சைவர்களால் வணங்கப்படுகிறது.
மேலும் இந்த கோயில் இலங்கை வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்திற்கு சாட்சியமாக இருந்தது.
இது ஆயுதப் போரின் போது 12 ஆண்டுகளாக மூடப்பட்டு மீண்டும் 2002இல் திறக்கப்பட்டது என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!