செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதி! விசாரணைகள் ஆரம்பம்
Mayoorikka
2 years ago

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்க நுகேகொடையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேனாநாயக்க, நுகேகொடை, பாகொட வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என நம்புவதாக காவல்துறையினர் சந்தேகின்றனர்.
இந்த தாக்குதலின்போது சேனாநாயகவின் கால் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
எனினும் அவர் உடல் நிலை தேறிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.



