அண்மையில் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- மஹிந்த அமரவீர

Prasu
2 years ago
அண்மையில் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை- மஹிந்த அமரவீர

வடக்கு மற்றும் கிழக்கில் அண்மையில் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தி உள்ளது. 

இதனையிட்டு, அடுத்த வாரம் கபினட் பத்திரிகையை அடுத்த வாரம் அமைச்சரவையில் வெளியிட உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த யோசனைக்கான அனுமதி கிடைத்தவுடன் கால்நடைளுக்கான இழப்பீடுகளை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் அண்மையில் அதிக குளிரான காலநிலை ஏற்பட்டதன் காரணமாகவே கால்நடைகள் அழிவுற்றதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 1800 க்கும் அதிகமான கால்நடைகள் அழிவுற்றதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துதுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!