கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை
Prathees
2 years ago

மஹியங்கனை கூட்டுறவு சங்கத்தின் தேர்தலை தடுக்கும் வகையில் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவிருந்தது.
குறித்த தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த பதுளை மாகாண மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இதுதொடர்பான வழக்கை ஜனவரி 11ம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர்கள் சார்பில், சட்டத்தரணி உதய பஸ்நாயக்கவின் ஆலோசனையின் பேரில், சந்துன் சேனாதிபதி இது தொடர்பான உண்மைகளை நீதிமன்றில் அறிவித்தார்.



