பெறுமதி சேர் வரி சட்டமூலத்தில் சபாநாயகர் தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
Kanimoli
2 years ago

பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (14) சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் கடந்த 9 ஆம் திகதி திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 82 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய சேர்பெறுமதி (திருத்தச்) சட்டமூலம் 2022 ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமாக நேற்று முதல் 14 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.



