அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வெளியீடு

Kanimoli
2 years ago
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வெளியீடு

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 361.19 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவலுக்கமைய, பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு குறைந்துள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 397.91 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 382.17 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 462.18 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 444.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!