தினேஸ் சாஃப்டர் கொலைச் சம்பவம்: முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் வாக்குமூலம் பதிவு

Prathees
1 year ago
தினேஸ் சாஃப்டர் கொலைச் சம்பவம்: முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் வாக்குமூலம் பதிவு


இலங்கையின் முன்னணி காப்புறுதி நிறுவனமொன்றின் பணிப்பாளர் தினேஸ் சாஃப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
நேற்று வியாழன் (15) பிற்பகல் பொரளையில் உள்ள பொது மயானத்தில் சாஃப்டர் தனது காருக்குள், கட்டப்பட்டு மூச்சுத் திணறிய நிலையில் மீட்கப்பட்டார்.

பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

தொழிலதிபர் தினேஸ் சாஃப்டர் வியாழன் (15) பிற்பகல் தனது இல்லத்திலிருந்து வெளியேறியபோது, பொரளைக்கு செல்வதாக மனைவியிடம் கூறியிருந்தார்.

முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸை சந்திக்கப் போவதாக தினேஸ் சாஃப்டர் தனது குடும்பத்தினரிடம் கூறியதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணியளவில் தினேஸ் சாஃப்டர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் அவரது மனைவி பலமுறை மேற்கொண்ட அழைப்புகளுக்கு பதிலளிக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஒரு செயலியைப் பயன்படுத்தி, பொரளையில் உள்ள பொது மயானத்தில் தொலைபேசியைக் கண்டுபிடித்த பிறகு, தினேஸ் தினேஸ் சாஃப்டர் சிற்றூந்துக்குள் கட்டப்பட்டபடி கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்தநிலையில் பிரைய்ன் தோமஸை சந்திக்கப் போவதாக தினேஸ் சாஃப்ட்டர் தனது மனைவியிடம் கூறியிருந்ததால், முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இருந்தும் இலங்கை காவல்துறை வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளது.

அவர் தொழிலதிபர் தினேஸ் சாஃப்டரிடம் இருந்து 1.4 பில்லியன் ரூபாவை பெற்றிருந்தபோதும் அதனை திருப்பி தரவில்லை என்று செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!