போதைவஸ்த்தை தடுக்கவேண்டியவர்கள் யார் யார்? போதைவஸ்த்தை தடுப்போம்.

போதைவஸ்த்தை தடுக்கவேண்டியவர்கள் யார் யார்? போதைவஸ்த்தை தடுப்போம்.
வடக்குக் கிழக்கு தமிழர் பிரதேசத்தைவிட சிங்கள மக்கள் பரவலாக வாழும் பகுதியிலேயே போதைவஸ்து விநியோகமும் பாவனையும் அதிகமாக உள்ளது.
-பொலீஸ் அதிகாரி கருத்து-
இலங்கைக்கு போதைவஸ்துக்களை மீனவர்கள் போர்வையில் இந்தியாவிலிருந்தே கடத்தப்படுகிறது.
-கடற்படை தளபதி கருத்து-
போதைப்பொருட்களை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களான இடைத் தரகர்களில் பலர் போதைவஸ்துப் பழக்கத்துக்கு அடிமையானவர்களே.
-பொதுநலம் விரும்பியின் கருத்து-
போதைப்பொருள் வியாபாரத்தின் பின்னணியில் இருந்து பெரும் பணம் சம்பாதிக்கும் ஆணிவேர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வசிக்கும் பெரும் பணம், பாதுகாப்புக்கொண்ட பண முதலைகளே.
-போதைப்பொருள் தடுப்புப் பிரிவு-
போதைப்பொருள் கலாச்சாரத்தை இல்லாது ஒழிக்க வெறும் பாதுகாப்புப் படைகளால் மட்டும் முடியாது. பொது மக்களும் உதவவேண்டும்.
-பாடசாலை அதிபர்-
தமது பிள்ளை போதைவஸ்து பாவனையாளன் என தெரிந்தும் அதனை மறைக்கும் பெற்றோர்களும் குற்றவாளிகளே.
-பொதுநல விரும்பி-



