தூதரக அலுவலகத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விசாரணையும் தவறான பாதையில்!

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் காரியாலயத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும்,ஆனால் அந்த விசாரணை முறையாக நடத்தப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தூதரக அலுவலகத்தின் சில அதிகாரிகள் சேவைகளை செய்வதற்கு இலஞ்சம் பெறுவதாக ஊடகமொன்றில் வெளிக் கொண்ரப்பட்டது
சேவைகளைப் பெற வருபவர்கள் தேவையற்ற துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் தெரியவந்தது.
பின்னர்இ வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய இது தொடர்பான முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் கையளித்ததுடன், அது தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்ளக விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த உள்ளக விசாரணையில் நளின் குமார மற்றும் ஆர்.பி.குமாரசிங்க என்ற இரு அதிகாரிகள் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலஞ்ச வழக்குகளுக்கும் சேவைகளை பெற்றுக் கொள்ள வரும் மக்கள் ஒடுக்கப்படும் சம்பவங்களுக்கும் இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.
இருந்த போதிலும் முறையான விசாரணையின்றி அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றமிழைத்த அதிகாரிகள் இன்னும் குற்றஞ்சாட்டப்படாமல் தலைமறைவாக உள்ளனர்.



