மூளை சாவடைந்த நிலையிலேயே தினேஷ் சாப்டர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

#SriLanka #Sri Lanka President #Death
Kanimoli
1 year ago
மூளை சாவடைந்த நிலையிலேயே தினேஷ் சாப்டர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே அவரது மூளைச்சாவு அடைந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின்படி, இந்த விடயம் வெளியாகியுள்ளது.
வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காருக்குள் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பிறகு, அன்று இரவு, தினேஷ் ஷாஃப்டர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாஃப்டர் கழுத்தை நெரிக்கப்பட்டமையால் இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து விசாரணை நடத்திய தடயவியல் குழுவினர், அவருடைய கழுத்து நெரிக்க பயன்படுத்தப்பட்ட கம்பி போன்றவற்றையும், கைகளை கட்ட பயன்படுத்திய பொருட்களுக்கு சமமான பொருட்களை அவரது வீட்டில் கண்டெடுத்துள்ளனர்.
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்ற மருத்துவ அதிகாரிகளிடம் கருத்துக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்தில் இருந்த தடயவியல் சான்றுகள் அழிக்கப்பட்டதால், தினேஷ் ஷாஃப்டர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டாரா அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பதை அறிவியல் ரீதியாக கூற இயலாது என்று சட்டவைத்திய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சாஃப்டரின் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரான கிரிஷ் பெரேரா, பொது மயானத்தில் இருந்து கொழும்பில் உள்ள வைத்தியசாலைக்கு வர்த்தகரை தனது காரில் ஏற்றிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் இருந்த ஆதாரங்கள் அழிக்கப்பட்டதால், தினேஷ் ஷாஃப்டர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா என்பதை அறிவியல் பூர்வமாக தீர்ப்பது கடினமானதாக உள்ளது.
காரின் முன் இருக்கையில் இருந்த தினேஷ் ஷாஃப்டரின் கழுத்தை நெரிக்க பயன்படுத்திய கம்பி பின் இருக்கையில் கண்டெடுக்கப்பட்டது.
ஒரு நபரின் கழுத்தை ஒரு கம்பியால் தொடர்ந்து இறுக்கமாகப் பிடித்தால், அது மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
குற்றப்புலனாய்வு வசம் உள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், தினேஷ் ஷாஃப்டர், சம்பவத்தினம் வீட்டை விட்டு வெளியேறிய 30 முதல் 40 நிமிடங்களுக்குள் மூளைச்சாவு அடைந்தார் என்று குறிப்பிடுகிறது.
தனது கணவர் பிற்பகல் 1.55 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறியதாக தினேஷ் ஷாஃப்டரின் மனைவி பொரளை பொலிஸில் தெரிவித்துள்ளார்.
அந்த நேரம் துல்லியமாக இருந்தால், தினேஷ் ஷாஃப்டர் பிற்பகல் 2.35 மணிக்கு இறந்திருக்கலாம்
இருப்பினும், முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸ், தனக்கு பிற்பகல் 2.42 மற்றும் 2.43 க்கு இடையில் தினேஷ் ஷாஃப்டரிடமிருந்து வாட்ஸ்அப் செய்தி வந்ததாக தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!