புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் டுபாய் சுத்தா கைது
Prathees
2 years ago

டுபாய் சுத்தா என அழைக்கப்படும் நிஷாந்த பிரியதர்ஷன இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கு தனது பணியகத்திடம் அனுமதிப்பத்திரம் பெறாத காரணத்தினால் தான் கைது செய்யப்பட்டதாக அந்த பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் பிராணி காமினி செனரத் யாப்பா நெத் நியூஸிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் பரிந்துரைக்கப்படுவதாக சமூக ஊடகங்கள் மூலம் துபாய் சுத்தா தெரிவித்திருந்தார்.
அதன்படி, முகவர் நிலையத்தின் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.



