தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை அறிய CIDக்கு விஜயம் செய்தார் பொலிஸ் மா அதிபர்

Prathees
1 year ago
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை அறிய CIDக்கு விஜயம் செய்தார் பொலிஸ் மா அதிபர்

தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிய. பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்தார்.

பொலிஸ் மா அதிபர், விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து விசாரணைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

கடந்த 15ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் வைத்து தினேஷ் ஷாப்டர் தனது காரில் கழுத்தும் கைகளையும் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, அதன் பின்னர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மர்ம மரணம் தொடர்பாக அவரது மனைவி, அத்தை உட்பட 84 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பௌதீக மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!