உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 47வது இடத்தில்

#SriLanka #people #Canada #Switzerland #India #China
Nila
1 year ago
உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 47வது இடத்தில்

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் சமீபத்திய தரவரிசைக்கமைய, நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தரவரிசையில் அவுஸ்திரேலியா நான்காவது இடத்திலும், ஸ்பெயின் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 47வது இடத்திலும், சீனா 56வது இடத்திலும், இந்தியா 67வது இடத்திலும் உள்ளன.

இதற்கிடையில், உலகின் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் முன்னிலை வகிக்கிறது.தரவரிசையில் இரண்டாவது இடத்தை டென்மார்க்கும், மூன்றாவது இடத்தை கனடாவும், நான்காவது இடத்தை சுவிட்சர்லாந்தும், ஐந்தாவது இடத்தை நோர்வேயும் பிடித்துள்ளன.

உயர்ந்த வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளில் இந்தியா 38வது இடத்திலும், பங்களாதேஷ் 55வது இடத்திலும், இலங்கை 63வது இடத்திலும் உள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!