தென்பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தைக் கொள்ளையிட்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் ரிமாண்ட்

#Robbery #Prison #Police
Prathees
1 year ago
தென்பகுதியில் ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தைக் கொள்ளையிட்ட  பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் ரிமாண்ட்

தென் மாகாணத்திலுள்ள மூன்று அரச வங்கிகளின் ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்து ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள், மேகத்தன்ன பொலிஸ் கட்டுப்பாட்டுப் பிரிவின் நிலையத் தளபதி மற்றும் இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு பத்தேகம பிரதான நீதவான் எம். பி. ஜி. பெர்னாண்டோ உத்தரவிட்டார்.

பல்கேரிய பிரஜை ஜோர்ஜஸ் இவனோர், கனேடிய பிரஜை ஜோர்ஜ் அர்தடன், மேகதன்ன பொலிஸ் நிலையத் தளபதி, பொலிஸ் பரிசோதகர் அஞ்சனா டி சில்வா, தெஹிவளையைச் சேர்ந்த அடம் லெப்பை யதிர் மற்றும் பெலவத்தை பத்தரமுல்லைச் சேர்ந்த அனுரகுமார ஜயரத்ன ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஐந்து சந்தேக நபர்களும் கணினி குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நேற்று (10) அதிகாலை பத்தேகம பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் உள்ள சொகுசு வீடமைப்புத் தொகுதியிலும், பொலிஸ் பரிசோதகர் பிடிகல அமுகொட பிரதேசத்திலும், மற்றைய இரு சந்தேக நபர்களும் அல்பிட்டய மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ நகரில் அமைந்துள்ள அரச வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தில் கடந்த 30ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் நாற்பத்தாறு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா மோசடியான முறையில் பெறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் காலி கராபிட்டிய நகரில் அமைந்துள்ள ATM இயந்திரத்தில் இரு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாவும், பத்தேகம நகரில் அமைந்துள்ள அரச வங்கியின் சாவடியில் அன்று அதிகாலை 4.00 மணியளவில் 57 இலட்சம் ரூபாவும் மோசடியாகப் பெறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!