இன்றைய வேத வசனம் 31.03.2023: தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே
ஒரு சமயம் வேடிக்கையான சம்பவம் ஒன்று நடந்தது. ஒரு நாள் ஆராதனையிலே ஐயர் தேவ செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.
அவர் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது இடையிலேயே சில சமூகப்பிரச்சனைகளை பற்றி விவாதித்து, சமூகத்திலே இப்படிப்பட்ட காரியங்களுக்கு எப்படி தேவ பிள்ளைகளாகிய நாம் நம்மை எப்படி விலக்கிக் காத்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறுவது வழக்கம்.
அப்படி இருக்கும் போது, ஒரு நாள் பெண்கள் ஆடைகளை எப்படி அணிய வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு இடையூராயிராதபடிக்கு எப்படி தங்களை உடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நேர்த்தியான உடைகளை பெண்கள் தங்களுக்கு தேர்வு செய்து அதனை உடுத்தும்போது ஒருவருக்கும் எந்த இடறலோ, அல்லது சோதனையோ ஏற்படாது என்று தன்னுடைய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
விஷேசமாக, அன்றய தினம் பரிசுத்த திருவிருந்து ஆராதனையாக இருந்தது. அவர் செய்தியைக் கொடுத்து முடித்ததும் விசுவாசிகள் அனைவரும் பரிசுத்த திருவிருந்தில் கலந்து கொள்ள அவருக்கு முன் சென்று முழங்காற்படியிட்டனர்.
ஒருவருக்குபின் ஒருவராக முழங்காற்படியிடும் போது, ஒரு வாலிபப்பெண் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டால். அவள் அணிந்திருந்த ஆடை இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் டீ-சார்ட் அவளைப் பார்த்ததும் ஐயர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது அவர் மகள்.
இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?
விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா?
நியாயப்பிரமாணத்தைக் குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?
எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே. (#ரோமர் 2:21-24)