இன்றைய வேத வசனம் 03.04.2023: கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்
டாக்டர் ஒருவர் சொன்னார், அவர் மருத்துவமனை ஆரம்பித்த போது கர்த்தரிடம் இரு பொருத்தனைகள் செய்தாராம். ஒன்று எளியவருக்கு இலவச மருத்துவம் அளிப்பது, இரண்டாவது வருமானத்தில் ஒரு பங்கை ஏழைகளுக்கு தருவேன்" என்பதே அவரின் பொருத்தனை!
ஒவ்வொரு நாளும் இரவு, அன்று வந்த மொத்த வருமானத்தில் ஒரு பங்கை தனியாக எடுத்து அதை ஏழைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் கொடுத்து, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்துவாராம்.
கர்த்தர் அவரோடிருந்தபடியால், மற்ற எந்த டாக்டர்களாளும் அவரோடு போட்டி போட முடியவில்லை. இன்று கர்த்தரால் மிக ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் மேன்மையாய் உயர்ந்து நிற்கிறார்.
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். (நீதிமொழிகள் 19:17)
"கொடுங்கள்; அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்'' (லூக்கா 6:38 )
நீங்களும் ஏழைகளுக்கும், திக்கற்றவர்களுக்கும், கல்வி கற்க போதிய பொருளாதார இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, உதவி கரம் நீட்டுகிறவர்களாய் இருங்கள். கர்த்தர் உங்களையும் இம்மைக்குரிய ஆசீர்வாதங்களினாலும் பரத்திற்குரிய ஆசிர்வாதங்களினாலும் ஆசீர்வதிப்பார். ஆமென்!! அல்லேலூயா!!!
#மத்தேயு 25:45
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.