இன்றைய வேத வசனம் 04.04.2023: என்னில் நிலைத்திருங்கள் நானும் உங்களில் நிலைத்திருப்பேன்
என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன். யோவான் 15:4
பல ஆண்டுகளுக்கு முன்பு, விலங்குகள் பராமரிக்கும் இடத்திலிருந்து ஜூனோ என்ற வயது வந்த கருப்பு பூனையை வீட்டிற்கு கொண்டு வந்தோம். எங்கள் வீட்டிலிருக்கும் எலிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காகவே நான் அதை கொண்டுவந்தேன். ஆனால் எங்கள் வீட்டிலிருப்பவர்கள்,
செல்லப்பிராணியை விரும்பினர். எங்கள் வீடு தான் ஜூனோவின் வீடு என்றும், தன் உணவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இங்கே தான் திரும்பிவரவேண்டும் என்றும் அது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை அதற்கு கற்றுக்கொடுப்பதற்கு முதல் வாரத்தில் நாங்கள் அதிக பிராயாசம் ஏறெடுத்தோம். அதன் பிறகு ஜூனோ எங்கு சுற்றித் திரிந்தாலும், அது வீட்டிற்கு சரியாய் வந்து சேரும்.
நம்முடைய மெய்யான வீட்டை அறியாதபட்சத்தில், நாம் நன்மை, அன்பு, மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை தேடி அலைந்துகொண்டேயிருப்போம். மெய்யான வாழ்க்கையை நாம் அடையவேண்டுமாகில், “என்னில் நிலைத்திருங்கள்” (யோவான் 15:4) என்று இயேசு சொல்லுகிறார்.
வேதாகம நிபுணரான ஃபிரடெரிக் டேல் ப்ரூனர், நிலைத்திருத்தல் என்னும் வார்த்தையானது குடும்பம் மற்றும் வீடு பற்றிய எண்ணத்தைத் தூண்டுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறார். எனவே புரூனர் இயேசுவின் வார்த்தைகளை “என்னோடு வீட்டில் தங்கியிருங்கள்” என்று மொழிபெயர்க்கிறார்.
வீட்டைக் குறித்த அந்த சிந்தையை தூண்டுவதற்கு இயேசு, திராட்டைச் செடியில் நிலைத்திருக்கும் கிளைகளை உதாரணமாய் பயன்படுத்துகிறார். கிளைகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதின் வீடாகிய செடியில் நிலைத்திருக்கவேண்டும்.
நம்முடைய பிரச்சனைகளை சரிசெய்வதற்கு அல்லது சில புதிய “ஞானத்தை” அல்லது மகிழ்ச்சியான எதிர்காலத்தை வழங்குவதற்கு வெற்று வாக்குறுதிகளுடன் பல குரல்கள் நம்மை அழைக்கின்றன. ஆனால் நாம்?