இன்றைய வேத வசனம் 18.04.2023: நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்
மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" (#மத்தேயு 2:10). சாஸ்திரிகள் நட்சத்திரத்தைக் கண்டபோது, அவர்கள் உள்ளம் எந்த நிலைமையிலிருந்தது என்பதை மத்தேயு அழகாக, "மிகுந்த ஆனந்த சந்தோஷம்" என்று குறிப்பிடுகிறார்.
நட்சத்திரத்தைக் காணும்போதே சந்தோஷம் அவ்வளவிருந்தால், இயேசுவைக் காணும்போது...! ஆ! சொல் முடியாத சந்தோஷம்.
ஒரு கிராமத்திலுள்ள ஏழைச் சிறுமி வியாதிப்பட்டு, பட்டணத்திலுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அது கிறிஸ்மஸ் நாட்களானபடியால், இரவெல்லாம் அநேகர் கிறிஸ்மஸ் கேரல்கள் பாடிக்கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள்.
ஏன் அவர்கள் இவ்வளவு மகிழ்ச்சியாய் பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த சிறுமி விசாரித்த போது அருகிலிருந்த படுக்கையிலிருந்தவர் இயேசுவைப் பற்றியும், அவர் பூமியில் பிறந்த சம்பவத்தைப் பற்றியும், அவர் ஒவ்வொருவரின் உள்ளத்தில் பிறக்க விரும்புவதைப் பற்றியும் சொன்னபோது, அச்சிறுமி உடனே கர்த்தரைத் தன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டாள்.
அந்த படுக்கை அவளுக்கு மிகுந்த ஆனந்த சந்தோஷமாயிருந்தது. பரம்பரைக் கிறிஸ்தவர்கள், கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை நினைத்து, நினைத்து கவலைப்பட்டு, கலங்கிப்போய் இருக்கும் நேரத்தில்,
அவளோ, துய்மையான உள்ளத்தோடும், குழந்தையைப் போலுள்ள விசுவாசத்தோடும், இயேசுவுடனே வாசம்பண்ணுவதைப்போல் உள்ளத்தில் மகிழ்ந்து களிகூர்ந்து கொண்டிருந்தாள்.
கிறிஸ்து உங்கள் உள்ளத்தில் வாசம்பண்ணுகிறார் என்றால், உலக பண்டிகைகளை உதறிவிட்டு, முக மகிழ்ச்சியோடு, உங்கள் நாவு உன்னதரின் மகத்துவத்தை பிறர்க்கு அறிவிக்கட்டும். ஆமென்!! அல்லேலூயா!!!
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன். என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். (#ஆபகூக் 3:18)