தென்கொரியா சென்ற விமானத்தின் அவசரக் கதவை திறந்த பயணி கைது. விமானத்திற்கும் பயணிகளிற்கும் பாதிப்பில்லை.

#world news #Lanka4 #South_Korea #லங்கா4 #Passenger
Kantharuban
4 months ago
தென்கொரியா சென்ற விமானத்தின் அவசரக் கதவை திறந்த பயணி கைது. விமானத்திற்கும் பயணிகளிற்கும் பாதிப்பில்லை.

தென் கொரியாவில் தரையிறங்கிய பிரபல விமானத்தின் அவசரக் கதவைத் திறந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று  வெள்ளிக்கிழமை டேகு சர்வதேச விமான நிலையத்தில் கதவு திறந்த நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் 194 பயணிகளும் உயிர் தப்பினர்.

குறைந்தது அரை டஜன் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

30 வயதுடைய நபர், தரையிறங்கியவுடன் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விமானம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை ஜெஜு தீவில் இருந்து புறப்பட்டுள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு