ஆயிரக்கணக்கானோர் தலைமையில் வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்

#PrimeMinister #Death #Women #Bangladesh #condolence
Prasu
1 hour ago
ஆயிரக்கணக்கானோர் தலைமையில் வங்காளதேச முன்னாள் பிரதமர் உடல் அடக்கம்

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சி தலைவருமானவர் கலிதா ஜியா தனது 80வது வயதில் காலமானார்.

இவர் இதயம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினை காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், கலிதா ஜியாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்காவில் ஷெர் இ பெங்கால் நகர் பகுதியில் முன்னாள் அதிபரும், கலிதா ஜியாவின் கணவருமான ஜியாவு ரகுமான் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு அருகே கலிதா ஜியாவின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!