யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாரங்கன் உயிரிழப்பு!

#Sri Lanka #Jaffna #Death #Hospital
Mayoorikka
6 months ago
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாரங்கன்  உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாரங்கன் நேற்று உயிரிழந்துள்ளார்.

 யாழ்.போதனா வைத்தியசாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய வைத்தியர் வேலாயுதம் சாரங்கன் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 ஐந்து நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்த நிலையில் வீட்டில் நிலை தடுமாறி வீழ்ந்ததை தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்த நிலையில் பின் உடலுறுப்புகள் படிப்படியாக செயலிழந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். 

 எழுதுமட்டுவாழ் தெற்கை பிறந்த இடமாக கொண்ட வைத்தியர் சாரங்கன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமாவார். 

 அன்னாரின் இழப்பிற்கு வைத்தியசாலை சமூகம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு