கேமெரூனில் லாரி மீது பஸ் மோதிவிபத்துக்குள்ளானதில் 19 பேர் மரணம்
#Death
#Accident
#Hospital
#Bus
Prasu
1 year ago

மத்திய ஆப்பிரிக்க நாடு கேமரூன். இந்நாட்டின் இசிகா நகரில் இருந்து பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. டவ்லா - இடா சாலையில் சென்றபோது சாலையின் எதிரே வந்த லாரி மீது மோதிய பஸ் கோர விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பஸ் பயணிகள் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.



