உக்ரைனில் உள்ள மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
#Hospital
#Attack
#Russia
#Ukraine
#War
Mani
1 year ago

உக்ரைனின் கிழக்கு நகரமான டினிப்ரோவில் அமைந்துள்ள மருத்துவமனை மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
எந்தவொரு இராணுவ நியாயமும் இல்லாமல் மருத்துவமனைகளுக்கு எதிராக போராடும் ஒரு தீய அரசால் மட்டுமே பயங்கரவாதத்தை நடத்த முடியும். ரஷ்யா வேண்டுமென்றே இந்தத் தீமையின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது, மாறாது. தீவிரவாதத்தை முறியடிப்பதே ஒரே தீர்வு.என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



