பாலி புனித கோவிலில் நிர்வாணமாக திரிந்த பெண் சுற்றுலா பயணி

#Arrest #Temple #Women
Prasu
1 year ago
பாலி புனித கோவிலில் நிர்வாணமாக திரிந்த பெண் சுற்றுலா பயணி

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோவிலுக்குள் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் சென்றார். அவர் திடீரென தனது ஆடைகளை கழற்றி வினோதமாக நடந்து கொண்டார். 

அப்போது அங்கு ஏராளமானோர் உடனிருந்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோவிலில் நிர்வாணமாக இருந்ததற்காகவும், புனித தலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதற்காகவும் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, அவரை மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 பாலி கோவிலில் ஜெர்மனி பெண் ஒருவர் நிர்வாணமாக சுற்றித் திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!