யாழ்ப்பாணம் முட்டாஸ் கடைச் சந்தியில் விபத்து: இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#Accident
#Lanka4
Kanimoli
1 year ago

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள முட்டாஸ் கடை சந்தி அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மீசாலையைச் சேர்ந்த இராஜரட்ணம் அபிதாஸ் என்கிற 29 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது லொறியுடன் மோதுண்டு லொறியின் சில்லினுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நேர்காணல் ஒன்றிற்காக சென்றபோதே குறித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.



