எமது நாடு உற்பத்தி சார்ந்த நாடாக மாற்றப்பட்டு ஏற்றுமதியை விஸ்தீரணப்படுத்தப்படுகிறது - சஜித் பிரேமதாச

#Sri Lanka
Kanimoli
4 months ago
எமது நாடு உற்பத்தி சார்ந்த நாடாக மாற்றப்பட்டு ஏற்றுமதியை விஸ்தீரணப்படுத்தப்படுகிறது  - சஜித் பிரேமதாச

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் பிற தொழில் முயற்சியாண்மையாளர்கள் தங்கள் தொழில்களை மேம்படுத்தத் தேவையான அதிகபட்ச பக்கபலம் வழங்கப்படும் எனவும், எமது நாடு உற்பத்தி சார்ந்த நாடாக மாற்றப்பட்டு ஏற்றுமதியை விஸ்தீரணப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் இல்லாவிட்டால் இந்த பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு எமது நாடு பாரிய சரிவைச் சந்தித்திருக்கும் எனவும், அந்த தொழிற்சாலைகளால் தான் நாடு இந்நிலைக்கேனும் தாக்கு பிடிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், அன்று தொடங்கப்பட்ட பல தொழிற்சாலைகள் இன்று மூடப்படுவது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தேசியத்துவத்துக்கும் தேசிய தொழில் முயற்சியாண்மைகளுக்கும் முன்னுரிமையளிப்பதாகவும், கிராம, நகர மக்களின் பக்க பலத்துடன் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் பிரவேசிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு