பாக்குநீரிணை வென்றாய்
#SriLanka
#Batticaloa
#Student
#Poems
#Tamil Student
#Lanka4
#Swim
Kanimoli
1 year ago
சாதனை படைத்தாய்
சரித்திரம் ஆனாய்.......
சோதனை வென்றாய்
சுடரொளி தந்தாய்......
வல்லவனே உன்னை
வாயார வாழ்த்துகின்றேன்.....
சொல்மாலை தொடுத்து
சூட்டுகின்றேன் பாமாலை....
மட்டக்களப்பு தந்த மதுசிகனே
மங்காப் புகழ் படைத்தாய்
பட்டறிவுத் திறன் கொண்டு
பாக்கு நீரிணை கடந்தாய்.......
வித்தாகி முளைத்தாய்-தமிழர்
முத்தாகி மிளிர்ந்தாய்- மண்ணின்
சத்தாகி நின்று நிலைப்பாய்
சாதனைகள் இன்னும் படைப்பாய்
வாழ்க நின் புகழ்.......
வளர்க உன் சாதனைகள்....
---ஜி.ஸ்ரீநேசன்---