இலங்கையில் 17 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்! உலக உணவுத் திட்டம்

#SriLanka #Food
Mayoorikka
10 months ago
இலங்கையில்  17 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில்!  உலக உணவுத் திட்டம்

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் முன்னேறி வருவதாகவும் 3.9 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவு பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையிவேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 கடந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலையில் 60 ஆயிரம் பேர் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததுடன், அந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

 சிறந்த உணவு நுகர்வில் இருந்து உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம் உருவாகிறது என்றும் இது உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என்று உணவுத் திட்டம் தெரிவிக்கிறது.

 இந்த நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது. தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்டச் சமூகங்களுக்குள்ளும், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களைத் தங்கள் முக்கிய வருமான ஆதாரமாக நம்பியிருக்கும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை காணப்பட்டது.

 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு இரண்டு முக்கிய பயிர் பருவங்களில் அரிசி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி கடந்த ஐந்தாண்டு சராசரியை விட 14 சதவீதம் குறைவாக 4.1 மில்லியன் தொன்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

 எவ்வாறாயினும், சிறு விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய உரங்கள், பலதரப்பு மற்றும் இருதரப்பு நன்கொடை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மூலம், உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,