புடினை சந்தித்த பெலாரஸ் அதிபர் மருத்துவமனையில் கவலைக்கிடம்: விஷம் வைத்திருக்கலாம்: நீடிக்கும் மர்மம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய அதிபர் புடினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெ ன்கோ கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்கோ சென்று சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் ராணுவம் பயிற்சி மேற்கொள்வது,பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாஸ்கோவில் தங்கியிருந்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
எனினும் , புடினின் நெருங்கிய நண்பர் பெலாரஸ் அதிபர் என்பதால் அப்படி எதுவும் நடந்திருக்காது எனவும் கூறப்படுகிறது.
பெலாரஸ் உடல்நலக்குறைவு மர்மம் சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
உண்மையை மறைக்கும் செயலில் ரஷ்யா அரசு ஈடுபட்டு வருவதாக பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் வெலரி செப்காலோ குற்றம் சுமத்தியுள்ளார்