ஐ.நா.வின் தடையை மீறி ராணுவ உளவு செயற்கைக்கோள்களை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், வடகொரியா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தியது, இது சுற்றியுள்ள கடலில், குறிப்பாக தென் கொரியா மற்றும் ஜப்பானில் அதிக பதட்டங்களுக்கு வழிவகுத்தது. இதனையடுத்து வடகொரியா நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஐநா தடை விதித்துள்ளது.
வடகொரியா தனது இராணுவ உளவு முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் முறையாக செயற்கைக்கோளை ஏவுவதற்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக ஜப்பான் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.'
ஐக்கிய நாடுகள் சபையின் தடையை மீறும் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்கள் நாட்டுக்கு கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக ஜப்பான் கூறியுள்ளது. அதன்படி, தங்கள் எல்லைக்குள் நுழையும் செயற்கைக்கோள் அல்லது விண்வெளிக் குப்பைகளை இடைமறித்து அழிக்குமாறு ராணுவத்துக்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு உத்தரவிட்டுள்ளார்.



