துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

#SriLanka #Flight
Mayoorikka
1 year ago
துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை!

துருக்கியின் ஸ்டான்புல் நகரில் இருந்து கட்டுநாயக்காவுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நேரடி விமான சேவை தொடங்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இலங்கைக்கான துருக்கி தூதுவர் மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 துருக்கி ஏர்லைன்ஸின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவரும் கலந்துரையாடலில் இணைந்துள்ளார். தற்போது துருக்கி விமான சேவையானது மாலைதீவு ஊடாக இலங்கையை வந்தடைவதால் கூடுதலாக ஒன்றரை மணிநேரம் செலவிட வேண்டியுள்ளது.

 இந்த தாமதத்தால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக துருக்கி தூதுவர் தெரிவித்துள்ளார். துருக்கிய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால், ஸ்டோஷன்பூல் மற்றும் கட்டுநாயக்காவிற்கு இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க தேவையான நேரத்தையும் இடத்தையும் வழங்குமாறு துருக்கிய விமான சேவையின் அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.

 அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இந்த கோரிக்கையை இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் விமான நிறுவனத்திடம் அனுப்பி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்டோஷன்பூல் மற்றும் கட்டுநாயக்க இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 100 க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட துருக்கிய ஏர்லைன்ஸ், ஐரோப்பாவில் வான்கூவர் மற்றும் நியூயார்க் இடையே விமானங்களை இயக்குகிறது, எனவே அந்த விமானத்தின் மூலம் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளையும் இந்த நாட்டிற்கு அழைத்து வர முடியும் என்று துருக்கிய ஏர்லைன்ஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!