வானிலை மாற்றத்தால் ஏற்பட இருக்கும் விளைவுகள்.., வெளியான அதிர்ச்சி தகவல்!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை காரணமாக, உலக முழுவதும் பல வானிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக தென் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெயிலின் தாக்கமானது வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாதல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றம் காரணமாக குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை சராசரியை விட வெப்பநிலை அதிகமாவது வழக்கம். இந்த பசிபிக் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வை எல் நினோ என்று கூறுவார். தற்போது, தென் அமெரிக்க நாடான பெருவில் இந்த வெப்பநிலை மாற்றத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஏற்படும் மோசமான பாதிப்பை சமாளிக்க, அந்நாட்டு அரசாங்கம் சுகாதார அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, அந்நாட்டில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அடுத்த 60 நாட்களுக்கு அவசர நிலையை பெரு அரசு அறிவித்துள்ளது.



