அமெரிக்கா முழுவதும் ஒரே நாளில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் மரணம்
அமெரிக்க ராணுவ வீரர்கள் தியாகத்தை போற்றும் வகையில் தேசிய நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது. நாடு முழுவதும் இதற்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி தேசிய நினைவு நாளை அனுசரித்தனர்.
இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் நடந்த தேசிய நினைவு நாள் நிகழ்ச்சிகளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தன. 8 மாகாணங்களில் கடற்கரைகள், உயர்நிலைப் பள்ளிகள், மோட்டார் பேரணிகள் ஆகியவற்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அமெரிக்கா முழுவதும் ஒரே நேரத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடக்கிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.