சீனாவில் முதன் முதலாக ஒரு சாதாரண குடிமகன் உள்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

ரஷ்யா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து தனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய மூன்றாவது நாடு சீனா. இதை அடைவதற்காக சீனா பல பில்லியன் டாலர்களை விண்வெளி துறையில் முதலீடு செய்துள்ளது.
400 கி.மீ தொலைவில் உள்ள தனது உயரமான விண்வெளி நிலையமான தியான்ஹேவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா முடிவு செய்துள்ளது. நேற்று காலை சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளம் ஷென்சோ-16 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது. இதன் மூலம் சீனாவின் 4வது மனிதர்கள் கொண்ட விண்வெளிப் பயணத்தை குறிக்கிறது, ஆனால் ஒரு சாதாரண குடிமகன் உட்பட 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படுவது இதுவே முதல் முறை.
10 நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிந்த பிறகு, ஷென்சோ-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நுழைந்தது என்று சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோளில் இருந்த மூன்று நபர்களும் நலமுடன் இருப்பதாகவும், ஐந்து மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



