லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 5 பேர் மரணம்

#Death #Attack #Missile #Israel
Prasu
1 year ago
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் 5 பேர் மரணம்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. 

இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. 

அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

அதேவேளை, லெபனான் - சிரியா எல்லைகளிலும் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் அவ்வபோது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், சிரியா எல்லையில் லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியது. 

இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!